பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் இருந்தால், இந்த நாட்டிற்கு பறக்க முடியாது!


பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயரில் உள்ள பயணிகளை அனுமதிக்க மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகள் வர்த்தக கூட்டாளியான இண்டிகோ விமான நிறுவனத்திடம், சுற்றுலா, வருகை அல்லது வேறு எந்த வகையான விசாவில் பயணிக்கும் பாஸ்போர்ட்டில் ஒரே பெயரைக் கொண்ட பயணிகள் திங்கள்கிழமை முதல் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேவும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தனர்.

இதன் பொருள் கடவுச்சீட்டில் நபரின் முதல் மற்றும் கடைசி பெயர்கள் இரண்டும் தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அந்த அறிக்கையில், நவம்பர் 21, 2022 முதல் இந்த விதிமுறை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் இருந்தால், இந்த நாட்டிற்கு பறக்க முடியாது! | Single Name Passengers India Passport Cant Fly Uaegqindia

இதையடுத்து, இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிகாரிகள், பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயரைக் கொண்டவர்கள் மற்றும் குடியிருப்பு அனுமதி அல்லது நிரந்தர விசா வைத்திருப்பவர்கள் அதே பெயரை First Name மற்றும் Surname இரண்டு இடத்திலும் கொடுத்து புதுப்பிக்கப்பட்டால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, தங்கள் கணக்கு மேலாளரைத் தொடர்புகொள்ளவும் அல்லது goindigo.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும் விமான நிறுவனம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.