இந்தியாவைவிட தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவே… டெல்லியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி

கோவிட் உருவாகி அனைவரையும் சிறைப்படுத்திய பிறகு ஒன்றிய அரசு தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவிட் தொடுத்த போர் ஒருபக்கம் எனில் ரஷ்யா – உக்ரைன் போர் மறுபக்கம். இதனால் உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. மேலும் இந்த இக்கட்டான நிலைகளால் உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால் மக்களும் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இந்தச் சூழலில் வேலை வாய்ப்பை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துரித நடவடிக்கை தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம். எனவே அதுதான் ஒன்றிய அரசுக்கு இறுதி பட்ஜெட்டாக அமையும் என கருதப்படுகிறது.

நிலைமை இப்படி இருக்க, ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில நிதி அமைச்சர்களை சந்திக்க அழைப்பு விடுத்தார். அதில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சரும் கலந்துகொண்டார். அந்த சந்திப்பை முடித்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 

தேசிய அளவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பணவீக்க விகிதம் 2.5 சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் பொதுவிநியோக திட்டம். ரேஷன் திட்டம் சிறப்பாக செயல்படுவதால் தமிழ்நாட்டில் உணவு பொருள்களின் விலை குறைவாக இருக்கிறது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.