திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே காலேஜ் ரோடு விசாலாட்சி நகரில் புவனேஸ்வரி என்ற 56 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயராஜ் என்ற கணவரும், சிவசங்கரி என்ற மகளும் இருந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன் மகள் சிவசங்கரிக்கு திருமணம் நடந்துள்ளது.
ஆனால் இதுவரை சிவசங்கரிக்கு குழந்தை பிறக்கவில்லை. நான்கு மாதங்களாக குரு மகாராஜா வேறொரு பெண்ணுடன் ஓடிப்போய் தலைமறைவாகி இருக்கிறார். அவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று சிவசங்கரிய பல்வேறு இடங்களில் தேடி அலைந்து உள்ளார் .
அப்படி தேடி அலைந்த போது அவருக்கும் அந்த கள்ள காதலிக்கும் திருமணம் நடந்தது தெரியவந்துள்ளது. இதனால் சிவசங்கரி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நேற்று தூக்கில் தொங்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தாய் புவனேஸ்வரி போலீசில் புகார் அளித்த நிலையில் புகாரின் பேரில் சிவசங்கரியின் உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருக்கும் அந்த கணவரையும், அவரது கள்ள காதலியையும் தேடி வருகின்றனர்.