கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடியால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது! முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வகேலா பரபரப்பு குற்றச்சாட்டு…

காந்திநகர்: கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடி மற்றும் பாஜகவினரால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா  பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், கரசேவர்கள் வந்த இரு பெட்டிகளில் மர்மநபர்கள் தீவைத்தனர். இந்த சம்பவத்தில், 59 கரசேவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு காரணம் முஸ்லிம்கள் என கூறப்பட்டது. இதனால், அங்கு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 31 பேரைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்தது. இதில் 20 பேர் ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு மரண தண்டனையும் பெற்றனர். 11 பேரின் மரண தண்டனையையும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இந்த விவகாரம் தற்போது நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ந்தேதி என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள மாநில முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியை  ஷங்கர்சிங் வகேலா,  கோத்ரா ரயில் எரிப்பு சம்பம் தொடர்பாக பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். 2002 சட்டமன்றத் தேர்தலில் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்  செயல்படுத்தப்பட்டது  என குற்றம் சாட்டி உள்ளர்.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில், ரயில் பெட்டி உள்ளே இருந்துதான் எரிக்கப்பட்டது, வெளியில் இருந்து அல்ல என கூறியதுடன்,  தேர்தல் ஆதாயத்துக்காகவே கோத்ரா கலவரம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வர, கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி மற்றும் 59 பேர் 2002 பிப்ரவரி 26 அன்று எரித்துக் கொல்லப்பட்டனர். இதனால், கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தலில் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு செய்யப்பட்டது என குற்றசாட்டினார்.

இதனிடையே, 141 பேர் உயிரிழந்த #MorbiBridgeCollapse தொடர்பாக தானாக முன்வந்து வழக்கைத் தொடங்குமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா கோரிக்கை விடுத்துள்ளார்.

சங்கர்சிங் வகேலா குஜராத் மாநில முன்னாள் முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆவார். மத்திய அரசில் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.