நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் நகை கொள்ளையான வழக்கில் நேபாளர்கள் கைது!

நடிகரின் மனைவியை கட்டிபோட்டு 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் நேபாளத்தில் இருவரை கைது செய்த நிலையில், மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை நந்தம்பாக்கம், டிபன்ஸ் ஆபிசர்ஸ் காலனி, 12 வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் எல்லாம் அவன் செயல் திரைப்பட கதாநாயகன் ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் (60), இவரது மனைவி ராஜீ (51), கடந்த 10 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது புகுந்த மர்ம நபர்கள் இருவர் அவரது கை, கால்களை கட்டிப்போட்டு, வாயை டேப் வைத்து அடைத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டி பீரோ சாவியை வாங்கி வீட்டில் இருந்த 200 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
image
தகவலறிந்து அங்கு சென்ற நந்தம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நேபாளிகள் என கண்டுபிடித்தனர். இதையடுத்து பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கொள்ளையர்களை தேடி வந்தனர்.
தொடர்புடைய செய்தி: 
இதையடுத்து வீட்டில் வேலை செய்து வந்த ரமேஷ் (38) என்பவரும் சம்பவம் நடைபெற்றது முதல் இல்லாமல் இருப்பதால் அவர் தான் திட்டமிட்டு இந்த இருவர் மூலமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. அதன் காரணமாக ரமேஷின் மைத்துனர் கணேஷ் ராகையா உள்ளிட்ட 20 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
image
இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி பின்னர் நேபாள் சென்று கபுல் பகதூர் கத்தரி மற்றும் கரண் கத்தரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து மேலும் மூவரை தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.