வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக


பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி வாய்ப்புண் வருவதுண்டு.

இது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.

தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. இதற்கு சில எளிய வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம். 

வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக | Patti Vaithiyam Tips For Tamil Mouth Ulcer

image – brandondentalcare

  • தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும்.
  •  ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமையும்.
  • 2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளிக்கவும்.
  •  1 கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி தனியா சேர்த்து கொதிக்கவிடவும். லேசாக சூடானதும் வடிகட்டி இதை வைத்து வாய் கொப்புளிக்கவும். ஒரு நாளைக்கு 3-4 முறை இதை பின்பற்றவும்.
  •  ஒரு நாளைக்கு 3-4 முறை தக்காளி பழச்சாறு கொண்டு வாய் கொப்புளிக்கவும். அதேபோல ஒரு நாளைக்கு 3-4 முறை பச்சை தக்காளி அல்லது தக்காளிச்சாறு சாப்பிடவும். இது வாய் புண்களுக்கு சிறந்த வைத்தியம்.
  •   1 தேக்கரண்டி கிளிசரைனில் மஞ்சள் பொடி சேர்த்து அதை பேஸ்டை அப்ளை செய்யவும். தண்ணீரில் சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க வைத்து அது வெதுவெதுப்பான பிறகு வாய் கொப்பிளிக்கவும்.
  • 5-6 துளசி இலையை மென்று சாப்பிட்டு பிறகு தண்ணீர் குடிக்கவும். வாய் புண் ஏற்படும் போதெல்லாம் இதை 5-6 முறை செய்யவும்.
  •  கற்கண்டை உடைத்துப் போட்டால் காற்றின் ஈரப்பதத்தில் அது கரைய ஆரம்பித்து விடும். அதில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்து குழைத்து வாய்ப்புண்ணில் தடவ சீக்கிரம் குணமடையும்.
  •   வாழைப்பழம் மற்றும் தயிர் காலையில் சாப்பிடுங்கள் மற்றும் மதிய வேளையில் வாழைப்பழத்தோடு சிறிது தயிர் மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் குணமடையும்.
  •  தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கலவையுடன் ஈறுகளை மசாஜ் செய்யவும். வாய் புண்களுக்கு இது நல்ல தீர்வு ஆகும். 
  •   பெரிய நெல்லிக்காயை பேஸ்ட் செய்து அதை ஒரு நாளைக்கு இரண்டு முறை அது புண்களை எவ்வாறு குணப்படுத்துகிறது என்பதைப் பாருங்கள்.
  •  கசகசாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து அந்த கலவையை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.