145 ஓட்டங்கள் விளாசிய வீரர்! இந்திய அணியை மொத்தமாக காலி செய்த இருவர் கூட்டணி


ஆக்லாந்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

ஷ்ரேயாஸ் ஐயர் 80

ஈடன் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் (72), சுப்மன் கில் (50) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (80) அரை சதம் விளாசினர்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாம்சன் 36 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களும் எடுத்தனர்.

கில்-தவான்/Gill-Dhawan

@PTI

இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ, பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஷ்ரேயாஸ் ஐயர்/Shreyas Iyar

7வது சதம்

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 22 ஓட்டங்களும், டெவோன் கான்வே 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த டேர்ல் மிட்செல் 11 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் இருவரும் கைகோர்த்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய லாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7வது சதத்தை கடந்தார்.

மறுமுனையில் வில்லியம்சன் அரைசதம் கடந்தார்.

டாம் லாதம்/Tom Latham

@AFP/David Rowland

இந்திய அணி பந்துவீச்சாளர்களால் இந்த கூட்டணியை இறுதிவரை பிரிக்க முடியவில்லை.

நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டாம் லாதம்-கேன் வில்லியம்சன்/Tom Latham-Kane Williamson

@AFP Photo

221 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்

டாம் லாதம் 104 பந்துகளில் 5 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 145 ஓட்டங்களும், வில்லியம்சன் 98 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த கூட்டணி 221 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.   

டாம் லாதம்-கேன் வில்லியம்சன்/Tom Latham-Kane Williamson

@Andrew Cornaga/Photosport via AP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.