உலக கோப்பைக்காக கத்தார் மகனுடன் பறந்த வேல்ஸ் கால்பந்து ரசிகர்: இறுதியில் நேர்ந்த பரிதாபம்


உலக கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக கத்தார் நாட்டிற்கு பயணம் செய்த கால்பந்து ரசிகர் கேவின் டேவிஸ் என்பவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


கத்தாரில் வேல்ஸ் ரசிகர்

பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள பெம்ப்ரோக்ஷயர் (Pembrokeshire) பகுதியை சேர்ந்த கேவின் டேவிஸ் (62)  என்ற கால்பந்து ரசிகர் தனது மகனுடன் உலக கோப்பை போட்டியில் வேல்ஸ் அணிக்கு ஆதரவளிப்பதற்காக கத்தாருக்கு பயணம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் உலக கோப்பை கால்பந்தில் வேல்ஸ் அணியின் ஆதரவாளர் கேவின் டேவிஸ்(62) உயிரிழந்து விட்டதாக வேல்ஸ் கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

உலக கோப்பைக்காக கத்தார் மகனுடன் பறந்த வேல்ஸ் கால்பந்து ரசிகர்: இறுதியில் நேர்ந்த பரிதாபம் | Uk Wales Fan Dies In Qatar Football World Cup 2022 Sky News- ஸ்கை நியூஸ்

ஈரானுக்கு எதிரான வேல்ஸில் போட்டியை தொடர்ந்து அவர் தோஹாவில் உள்ள ஹமாத் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் அன்றைய போட்டியில் பார்வையாளராக கலந்து கொள்ளவில்லை என்றும், உடல்நிலை சரியில்லாமல் தனது விடுதியில் இருந்த நிலையில்  மருத்துவ காரணங்களால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பைக்காக கத்தார் மகனுடன் பறந்த வேல்ஸ் கால்பந்து ரசிகர்: இறுதியில் நேர்ந்த பரிதாபம் | Uk Wales Fan Dies In Qatar Football World Cup 2022Wales fans in Qatar- கத்தாரில் வேல்ஸ் ரசிகர்கள்(PA)

அஞ்சலி

வேல்ஸ் ரசிகர் கேவின் டேவிஸ் உயிரிழந்ததை தொடர்ந்து கால்பந்து ஆதரவாளர்கள் சங்கமான சிம்ருவை சேர்ந்த பால் கார்க்ரே, கேவின் வேல்ஸ் அணி ரசிகர்களின் ஒரு பகுதியாக இருந்தார், நாங்கள் அனைவரும் ஒரு பெரிய குடும்பம் போல இருக்கிறோம், இன்று எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை இழந்துவிட்டோம் என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் டேவிஸின் மகன் மற்றும் நண்பர்கள் நிலைமையை கையாண்ட விதத்தில் அவர்கள் மிகவும் தைரியமாக இருந்தாகவும், பால் கார்க்ரே தெரிவித்துள்ளார்.

உலக கோப்பைக்காக கத்தார் மகனுடன் பறந்த வேல்ஸ் கால்பந்து ரசிகர்: இறுதியில் நேர்ந்த பரிதாபம் | Uk Wales Fan Dies In Qatar Football World Cup 2022Wales fans in Qatar- கத்தாரில் வேல்ஸ் ரசிகர்கள்(PA)

வேல்ஸ் கால்பந்து சங்கத்தின் தலைமை நிர்வாகி நோயல் மூனி ட்விட்டரில் தெரிவித்த கருத்தில், “எங்கள் ஆதரவாளர் ஒருவர் இங்கு காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறேன், எங்கள் குடும்பத்திற்கு எங்கள் இரங்கல்கள் செல்கின்றன, நிச்சயமாக நாங்கள் எங்களால் முடிந்தவரை ஆதரிக்க இங்கே இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணியை ஆதரிப்பதற்காக 2,500 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கத்தாருக்கு பயணம் மேற்கொண்டு இருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.