வட இந்தியா பகுதியில் பாம்பு ஒன்று செருப்பை கவ்வி செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நீளமான பாம்பு ஒன்று ஒருவரது வீட்டிற்குள் நுழைய பார்க்கிறது.
ஒரு பெண், தனது ரப்பர் செருப்பை அந்த பாம்பை நோக்கி தூக்கி வீசுகிறார். உடனே அந்த செருப்பை பாம்பு தனது வாயால் கவ்வி கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ பார்த்து நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். காலே இல்ல செருப்பை தூக்கிக் கொண்டு என்ன செய்யப்போகிறது என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் பாம்பால் செருப்பை தூக்க முடியுமா என்று ஆச்சர்யத்துடன் பதிவிட்டுள்ளனர்.
newstm.in