டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம்! இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்!

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.  சமீபத்தில் குவாட்டரின் விலையை தமிழக அரசு உயர்த்தியது.  இதனால் குடிமகன்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாயினர்.  சுற்றுலா தளங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் 10 ரூபாய்  வசூலிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  மேலும், பல கடைகளில் MRPயை விட கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் குற்றசாட்டுகள் உள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள மணி மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மேல அம்பாசமுத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 23.06.2020 அன்று குவாட்டர் பிராந்தி வாங்கியுள்ளார். அப்போது குவாட்டரின் அதிகபட்ச சில்லறை விலை 160 ரூபாய் என அதில் அச்சிடப்பட்டுள்ள நிலையில், 190 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். எனவே தன்னிடம் கூடுதலாக 30 ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக் ஊழியர்கள் குறித்து வேல்முருகள் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

cour

அதில், கூடுதல் கட்டணம் வசூலித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டும் மூளைச்சூடும் ஏற்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் நிம்மதி இழந்துள்ளதாக வேல் முருகன் குறிப்ப்பிட்டிருந்தார். இந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நுகர்வோர் நீதிமன்றம், வேல்முருகனுக்கு 11,000 இழப்பீடு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை விற்பனை  மேற்பார்வையாளருக்கு நீதிமன்றம் உத்தரவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.