டிசம்பர் 9ல் திரைக்கு வரும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடித்துள்ள படம் ‛நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. சுராஜ் இயக்கி உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. வடிவேலுவுடன் ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், சஞ்சனா சிங், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், ரெடிங் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்க , சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் வடிவேலு பாடிய அப்பத்தா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.