"தமிழக இளைஞர்களின் மனதில் ராமாநுஜரின் சரித்திரம் முக்கிய இடத்தைப் பெறும்!" – நாராயண ராமாநுஜ ஜீயர்

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் ஶ்ரீ யதுகிரி யதிராஜ மடம் சார்பில் இரண்டு நாள் ஶ்ரீ ராமாநுஜர் சாம்ராஜ்ய மஹோத்ஸவம் திருவிழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மேல்கோட்டை ஶ்ரீ யதுகிரி யதிராஜ மடம் 41வது மடாதிபதி ராஜ நாராயண ராமாநுஜ ஜீயர் சுவாமிகள், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, “பகவதி அம்மன் வீற்றிருக்கும் புண்ணிய பூமி கன்னியாகுமரி. ராமாநுஜரும் இங்கு வந்திருக்கிறார். விவேகானந்தர் இங்குதான் தேசிய உணர்வு பெற்றார். தேசத்தின் மறு சீரமைப்பை இங்கே தொடங்கிய விவேகானந்தர், சிகாகோவில் சனாதனக் கருத்துக்களை பரப்பினார்.

தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவர்னர்

எனது சிறு வயதில் இருந்தே ராமாநுஜரின் கருத்தை உள்வாங்கி வளர்ந்துருக்கிறேன். ராமாநுஜரும், சுவாமி விவேகானந்தரும் இந்தத் தேசத்துக்கு மிகப்பெரிய ஆன்மிகத் தொண்டாற்றியுள்ளனர். பாரதமாதாவின் இரு மகன்களான இவ்விருவரும் பாரதத்தின் இக்கட்டான காலகட்டத்தில் தோன்றி செயல்புரிந்துள்ளனர். இருவரும் இந்தியாவின் சிற்பிகள்” என்றார்.

இரண்டாவது நாளான நேற்று ‘அனைத்துலகும் வாழப்பிறந்தவர்’ என்ற தலைப்பில் ராமாநுஜர் மாநாடு நடைபெற்றது. பின்னர் 8 அடி உயர ராமாநுஜர் நல்லிணக்கத் திருவுருவச் சிலை திறப்புவிழா நடைபெற்றது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஶ்ரீ யதுகிரி யதிராஜ மடம் 41வது மடாதிபதி ராஜ நாராயண ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் சிலையைத் திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

ராமானுஜர் சிலை

பின்னர் தென்னிந்திய துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் ராஜ நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் பேசுகையில், “பகவத் ராமாநுஜரின் வாழ்க்கையும், அவரது பணிகளும் இந்தியாவின் தலைசிறந்த மனிதர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. இளைஞர்களை பக்தி மார்க்கத்தின் பக்கம் திருப்பி, அவர்களை லட்சியத்தை அடைய இந்த இரண்டுநாள் மாநாடு உதவியாக இருக்கும். தமிழக இளைஞர்களின் மனதில் பகவத் ராமாநுஜரின் சரித்திரம் முக்கிய இடத்தை பெறும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.