பட்டு புடவையில் ஜொலித்த வெளிநாட்டு பெண்! தாலி கட்டி கரம் பிடித்த ஆட்டோ ஓட்டுனர்


இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் இளைஞரை பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இளம்பெண் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்திய இளைஞரிடம் காதலில் விழுந்த வெளிநாட்டு பெண்

கர்நாடக மாநிலத்தின் ஹம்பியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். ஆட்டோ ஓட்டுனரான இவர், சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பெல்ஜியத்தில் இருந்து கெமில் என்ற இளம்பெண் ஹம்பிக்கு குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு வந்திருந்தார்.

அப்போது அவர்கள், அனந்தராஜின் ஆட்டோவில் பயணம் செய்திருந்தார். அத்துடன் ஹம்பியை பற்றிய தகவல்களை கெமிலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அனந்தராஜ் விளக்கமாகவும், புரியும்படியும் எடுத்து கூறி இருந்தார். அனந்தராஜ் நேர்மையாக இருந்ததால், அவரை கெமிலுக்கு பிடித்து விட்டது.

பட்டு புடவையில் ஜொலித்த வெளிநாட்டு பெண்! தாலி கட்டி கரம் பிடித்த ஆட்டோ ஓட்டுனர் | Belgium Women Married Indian Autodriver

hospet.online

தாலி கட்டினார்

பின்னர் 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து நேற்று ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷப்பா கோவிலில் இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

கெமிலின் பட்டு புடவையில் ஜொலித்த நிலையில் இந்து மத முறைப்படி அனந்தராஜ், அவர் கழுத்தில் தாலி கட்டினார்.
இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்தனர்.  

பட்டு புடவையில் ஜொலித்த வெளிநாட்டு பெண்! தாலி கட்டி கரம் பிடித்த ஆட்டோ ஓட்டுனர் | Belgium Women Married Indian Autodriver

hospet.online



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.