”பாலியல் புகாரில் ஆசிரியருக்கு எதிராக பேசக்கூடாதுணு போலீஸ் மிரட்டுறாங்க” – மாணவி புகார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என போலீசார் மிரட்டுவதாக பள்ளி மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர், ஆரோக்கிய அருள்தாமஸ். கடந்த 2019ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டது தெரியவந்த நிலையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது புகார் கொடுக்க வேண்டும் என்று கருதி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
image
இந்நிலையில், அந்த புகார் அடிப்படையில் மகளிர் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டநிலையில், அந்த வழக்கானது கடந்த 17ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணை (17 வயது மைனர் மாணவி) ஆசிரியர் மற்றும் போலீசார் மிரட்டி, மாணவியை ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்யவில்லை என கூறச் சொன்னதாக நீதிமன்றத்தில் மாணவி கூறியுள்ளார்.
image
இதனையடுத்து அந்த வழக்கில் சாட்சியாய் உள்ள மற்றொரு மாணவியை, போலீசார் அவர் வீட்டிற்கு வந்து மிரட்டி நீதிமன்றத்தில் நீயும் அந்த பெண்ணுக்கு, ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்யவில்லை என்று கூற வேண்டும் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதால் மாணவி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், மாணவியை தொடர்ந்து மிரட்டல் விட்டு வரும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.