முயற்சிகள் பலனளிக்கவில்லை! கனடாவில் வசிக்கும் 23 வயது இந்திய பெண் தொடர்பில் முக்கிய தகவல்


கனடாவில் காணாமல் போன இந்திய பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.

கனடாவில் இந்திய இளம்பெண் மாயம்

அதன்படி இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த இளம்பெண் ஜஸ்வீர் பர்மர் (23).
இவர் கனடாவின் Surreyவில் உள்ள 6600 block of 133rd Streetல் இருந்து கடந்த 21ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதற்கு அடுத்தநாளான 22ஆம் திகதி தனது குடும்பத்தை தொடர்பு கொண்ட நிலையில் பின்னர் பர்மர் குறித்து எந்தவொரு தகவலும் தெரியவில்லை.
பர்மாரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் பலனளிக்காததால் அவரது குடும்பத்தினரும், காவல்துறையினரும் அவரது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர்.

முயற்சிகள் பலனளிக்கவில்லை! கனடாவில் வசிக்கும் 23 வயது இந்திய பெண் தொடர்பில் முக்கிய தகவல் | Canada Indian Girl Missing

contributed photo/northdeltareporter/babushahi

பொதுமக்களிடம் கோரிக்கை

5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட பர்மர் 130 பவுண்ட் எடை கொண்டவர் ஆவார்.
அவரிடம் தங்க நிறத்திலான 2013 மொடல் டொயோட்டா கொரோலா கார் உள்ளது.

அவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.