ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஈங்கூர் செங்குளத்தில் இரும்பு ஆலையின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆலையில் இருந்து ரசாயனத்தை சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றுவதாக புகார் வந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலையை சுற்றியுள்ள பகுதியில் கோட்டாட்சியர் சதீஸ், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தனர்.
