வெயிட்டிங்கில் வெறியேற்றும் 'அவதார் 2' – வெளியாகாமலே பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை!

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார் 2’ (Avatar – The way of Water) திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வெறும் மூன்றே நாட்களில் 45 ப்ரீமியம் ஃபார்மேட் ஸ்கிரீன்களில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று சாதனை படைத்துள்ளது. 

மிக பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை வரவேற்க ‘அவதார் 2’ படம் மூலம் இந்திய சினிமாத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான டிக்கெட் புக்கிங் ஓப்பனிங் தற்போது தொடங்கி இருக்கிறது. கண்னை கவரும் வகையிலான அட்டகாசமான திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் ‘அவதார் 2’ திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என இந்த ஆறு மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. https://zeenews.india.com/tamil/topics/Avatar

உலக முழுவதும் பல்வேறு மொழிகளில் ‘அவதார் 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. ஜேம்ஸ் கேம்ரூனின் இயக்கத்திற்கு என ஏராளமான இந்திய ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது, திரையரங்குகளில் வெளியாகாமலே பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் ‘அவதார் 2’ திரைப்படம் புதிய சாதனையை உருவாக்கி உள்ளது. 

இந்தப் படத்திற்கான சீக்வலில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வெறும் மூன்றே நாட்களில் ப்ரீமியம் வடிவத்தில் அமைந்த 45 திரைகளில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைத் தாண்டி இன்னும் பல காட்சிகள் இந்திய மொழிகளில் திரையிடப்பட உள்ளன. 

இந்தியத் திரையரங்குகளில், இந்த டிசம்பர் மாதத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனையைப் படைக்கும் என்ற நம்பிக்கையை தியேட்டர் உரிமையாளர்களிடம் ‘அவதார் 2’ திரைப்படம் விதைத்துள்ளது. அடுத்த மாதத்தில் படம் பிரம்மாண்டமாக வெளிவரத் தயாராகி வரக்கூடிய நிலையில், இந்த அட்வான்ஸ் புக்கிங் என்பது படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தரக்கூடிய ஒன்று என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. 

PVR பிக்சர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கமல் கியான்சந்தினி இதுகுறித்து பகிர்ந்தபோது,“ஜேம்ஸ் கேம்ரூனும் அவரது படங்களும் எப்போதுமே இந்தியன் பாக்ஸ் ஆஃபிஸில் மேஜிக்கை உருவாக்கும். அவர் தரக்கூடிய அற்புதமான காட்சியனுபவத்திற்குப் பார்வையாளர்களும் காத்திருப்பார்கள். 

ப்ரீமியம் வடிவத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஓப்பனிங்கில் மட்டுமே மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கையில் வந்திருக்கிறது. இன்று மற்ற திரைகளுக்குமான ஓப்பனிங்கும் தொடங்கியிருக்கும் நிலையில், இன்னும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான புக்கிங்கை எதிர்ப்பார்க்கிறோம்” என்றார்.

INOX லெஷர் லிமிட்டடின் தலைமை நிரலாக்க அதிகாரி (Chief Programming Officer) ராஜேந்திர சிங் ஜயாலா பேசும்போது,”‘அவதார் 2’ படத்தின் சீக்வல் வெளியீடு என்பது தலைமுறைகள் தாண்டி அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும். ஏற்கனவே, எங்களுடைய ப்ரீமியம் பார்மேட் காட்சிகளுக்கான INOX ப்ராபர்ட்டி டிக்கெட்கள் ஏற்கனவே விற்பனையாகி விட்டது. இதுதவிர, வழக்கமான 3டி மற்றும் 2டி-க்கான ஓப்பனிங் வரும்போது இன்னும் அதிக அளவில் புக்கிங் எண்ணிக்கை அதிகமாகும்” என்றார். 

சினிபோலிஸ் தலைமை நிர்வாக அதிகாரி தேவங் சம்பத், “13 வருடங்களுக்கு முன்பு ‘அவதார்’படத்தின் முதல் பாகம் வெளியானபோது, அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனோம். அது அப்போது ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்து. இப்போது வரையிலும் பார்வையாளர்கள் மத்தியில் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது.

இதுபோன்ற மிகப்பெரிய எண்டர்டெயினர் திரைப்படங்களுக்கு பார்வையாளர்கள் எப்போதுமே வரவேற்பைத் தருவார்கள். அதனால், இந்தப் படத்தை சினிபோலிஸ் ரியல் டி 3டி-யில் உலகத்தின் சிறந்த 3டி டெக்னாலஜியில் பார்த்து மகிழுங்கள்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.