தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், சேப்பாக் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனைமுன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா வட்டாரங்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நடிகரும், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ் கமல் நிறுவனத்தின் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.