ஆல்லைனில் ரம்மி விளையாடிய மனைவி… கணவன் கண்டித்ததால் எடுத்த துயர முடிவு!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் இவரது மனைவி பந்தனா மஜ்கி இருவரும் தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு திருமணம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில் அஜய்குமார் மண்டலின் மனைவி பந்தனா ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 70 ஆயிரம் பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கணவர் அஜய் குமார் மண்டல் மனைவி பந்தனாவை கண்டித்துள்ளார் இதில் விரக்தி அடைந்த மனைவி பந்தனா நேற்று வேலைக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார். கணவர மட்டும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பந்தனா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் விரைந்து சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பந்தனா உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆளுநரின் அடாவடி:
ஸ்மார்ட்ஃபோன் வந்ததையடுத்து நம்மில் பலருக்கு அதுவே உலகம் என்று ஆகிவிட்டது. செல்ஃபோன் இல்லை என்றால் ஏதோ ஒரு கை உடைந்ததை போல ஃபீல் செய்யும் அளவுக்கு மொபைல்ஃபோன்கள் வெகுஜன மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒரு காலத்தில் பேசுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த செல்ஃபோனில் இன்று பலர் பேசுகிறார்களோ இல்லையோ, யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களை பார்க்கும் கருவியாக இன்றைய தலைமுறைக்கு செல்ஃபோன் பயன்பட்டு வருகிறது.

இதன நீட்சியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு செல்ஃபோன் வைத்திருப்பவர்கள் அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விபரீத விளையாட்டில் தினமும ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்து வாழ்க்கையில் நெருககடியை சந்திப்பவர்கள், குடிபழக்கத்தில் இருந்து மீள முடியாதவர்களை போல ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ஒரு கட்டத்தில் தங்களது வாழ்க்கையையே முடித்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டே, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதா, கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு முன் தமிழக சட்டமன்றத்தில நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுநாள்வரை அந்த மசோதாவை ஆரப்போட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதா ஒப்புதல் என்னாச்சு என்று கேட்ட பிறகுதான், அதில் சில சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த அலட்சியப்போக்கிற்கு அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.