இந்தியாவை உலுக்கிய கொலை வழக்கு: டாக்டர் பெண்ணுடன் பழக்கம்., வெளிவரும் புதிய தகவல்கள்


ஆப்தாப் பூனாவாலா தனது காதையை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தபோது, டாக்டர் பெண்ணுடன் பழகியதாகக் கூறப்படுகிறது.

தனது காதலி ஷ்ரதா வால்கரை கொடூரமாக கொலை செய்த ஆப்தாப் அமீன் பூனாவாலா, ஷ்ரதாவின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் போது அவர் பழகியதாக கூறப்படும் பெண், தொழில் ரீதியாக மருத்துவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டேட்டிங் ஆப்

ஷ்ரதாவை முதன்முதலில் சந்தித்த அதே தளமான பம்பிள் என்ற மொபைல் டேட்டிங் அப்ளிகேஷன் மூலம் அந்த பெண்ணை சந்தித்துள்ளார்.

இந்தியாவை உலுக்கிய கொலை வழக்கு: டாக்டர் பெண்ணுடன் பழக்கம்., வெளிவரும் புதிய தகவல்கள் | Aftab Poonawala Shraddha Murder Case Police Delhi

உளவியல் நிபுணரான அந்த பெண்ணை டெல்லி பொலிஸார் தொடர்பு கொண்டுள்ளனர்.

அஃப்தாப் அதே ஆப் மூலம் பல பெண்களை சந்தித்ததாகக் கூறப்பட்டதால், விசாரணை தொடர்பாக டேட்டிங் ஆப்பிற்கு பொலிஸார் கடிதம் எழுதியிருந்தனர்.

பாலிகிராஃப் சோதனை

அஃப்தாப் பூனாவாலா பாலிகிராஃப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார், பின்னர் அவர் போதைப்பொருள் பகுப்பாய்வு பரிசோதனையையும் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (திங்கட்கிழமை) ஆப்தாப் பூனாவாலாவின் 2வது பாலிகிராஃப் சோதனை நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், நாள் அம்பேத்கர் மருத்துவமனையில் அவரது நார்கோ சோதனை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து விசாரணை

லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரதா வால்கரை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி எறிந்ததாகக் கூறப்படும் பூனாவாலாவின் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்டவரின் மண்டை ஓடு மற்றும் மீதமுள்ள உடல் பாகங்கள் மற்றும் உடலைத் துண்டிக்கப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகியவற்றை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.