கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் இடையே 186 மில்லியனுக்கு புதிய ஒப்பந்தம்


மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து  வெளியேறிய பிறகு, சவுதி அரேபியாவின் அல் நாசர் எஃப் சி-யிடம் இருந்து  கிறிஸ்டியானோ ரொனால்டோ £186 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.


ரொனால்டோ வெளியேற்றம்

37 வயதான போர்ச்சுக்கல் வீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2021ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார்.

ஆனால் அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அளித்த பேட்டிக்கு பிறகு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறினார்.

இது தொடர்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறுகிறார் என்று தெரிவித்து இருந்தது.

அல் நாசர் எப் சி-யுடன் ஒப்பந்தம் 

கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அவர் தற்போது சுதந்திரமான முகவராக மாறியுள்ளார் மற்றும் அவரது புதிய நகர்வுகள் குறித்து மற்ற கிளப்கள் பேச்சுவார்த்தையும் நடத்த முடியும்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் இடையே 186 மில்லியனுக்கு புதிய ஒப்பந்தம் | Ronaldo Offered 186M Contract By Saudi ClubCristiano Ronaldo-கிறிஸ்டியானோ ரொனால்டோ(Twitter)

ரொனால்டோ மான்செஸ்டரில் இருந்து வெளியேறிய பிறகு அவரை தங்கள் கிளப்பில் இணைத்து கொள்ள செல்சியா, இண்டர் மியாமி, மற்றும் ஏசி மிலன் உட்பட பல அணிகள் புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் உறுதியான சலுகையை சவுதி அரேபியாவின் அல் நாசர் எஃப் சி-யிடம் இருந்து பெற்றுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் இடையே 186 மில்லியனுக்கு புதிய ஒப்பந்தம் | Ronaldo Offered 186M Contract By Saudi ClubCristiano Ronaldo- கிறிஸ்டியானோ ரொனால்டோ(Twitter)

 37 வயதான போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்று ஆண்டுகள் அணியில் நீடிப்பதற்கு சவுதி கிளப் சுமார் £186 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த வாய்ப்பை பரிசீலித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.