‛ ஜாலி மூடில் ராகுல்: யாத்திரையில் சுவாரசியம்

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் ஜாலியாக காங்., எம்.பி ராகுல் பாத யாத்திரையை மேற்கொண்டார்.

காங்., எம்.பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் 7ம் தேதி துவக்கி உள்ளார். விலைவாசி உயர்வை எதிர்த்து ராகுல் மேற்கொண்டு வரும் யாத்திரை, கடந்த 23ம் தேதி மத்திய பிரதேசத்தில் நுழைந்தது.

latest tamil news

தொடர்ந்து நேற்று(நவ.,26) 4வது நாளாக அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா, தனது கணவர் மற்றும் மகனுடன் கலந்து கொண்டார். மத்திய பிரதேசத்தில் இன்று(நவ.,27) 5வது நாள் யாத்திரையை, மோவ் பகுதியில் இருந்து இன்று(நவ.,27) காலை ராகுல் பாத யாத்திரையை துவக்கி உள்ளார்.

புல்லெட் பைக் ஓட்டிய ராகுல்:

latest tamil news

இந்நிலையில், பாத யாத்திரைக்கு இடையே ராகுல் இன்று(நவ.,27) புல்லெட் பைக்கை ஜாலியாக ஓட்டினார். மேலும், சாலை விதிகளின் படி, ஹெல்மெட் அணிந்த படி ராகுல் சிறிது தூரம் பைக் ஓட்டிச்சென்றார். பைக்கில் பின் இருக்கையில் நாயை அமர வைத்து ராகுல் பைக்கை ஓட்டினார்.

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பைக்கின் வேகத்திற்கு இணையாக ஓடினர். ராகுல் பைக் ஓட்டிச்சென்றதை, அங்கிருந்த காங்., தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

latest tamil news

பொதுவாக தொண்டர்கள் மத்தியில் மோட்டார் சைக்கிளில் சிலர் பயணம் செய்யும்போது சில தலைவர்கள் ஹெல்மெட் அணியாமல் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாகும். ஆனால் ராகுல் சாலை விதிகளின் ஹெல்மெட் அணிந்து புல்லட் ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயை கொஞ்சிய ராகுல்:

விலங்கின ஆர்வலர்களான ரஜத் பரசார் மற்றும் சர்தாக் ஆகிய இருவரும் ராகுலை சந்தித்து, விலங்கின நல தொடர்பாக விவாதித்தனர். பின்னர் இவர்கள் அழைந்த வந்த ஜெர்மன் சேப்பர்டு இன நாயை ராகுல் கொஞ்சினார். தொடர்ந்து, நாயபை் பிடித்து பேரணியில் ராகுல் நடந்து சென்றார்.

latest tamil news

‛ ராகுல் வளர்ப்பு விலங்கினங்கள் மீது அன்புக்கொண்டவர். அதனால் அவரை சந்திக்க விரும்பினோம். மேலும் விலங்கினங்கள் குறித்து விவதிக்க விரும்பினோம் என்றார் ரஜத்.’ இந்நிகழ்ச்சி யாத்திரையில் கலந்து கொண்ட காங்., தொண்டர்கள் வியப்பாக பார்த்தனர்.

குழந்தையை உப்பு மூட்டை தூக்கினார்:

latest tamil news

மத்திய பிரதேசத்தில் பாதை யாத்திரையில் கலந்து கொண்ட அப்பகுதி மக்களிடையே பேசி மகிழ்ந்தார். யாத்திரையில் பிள்ளைகளுடன் கலந்து கொண்ட ஒரு பெண்ணுடன் புகைப்படம் எடுத்து ராகுல் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ஒரு சிறுமியை உப்பு மூட்டை எனப்படும் தோளில் சிறுது தூரம் சுமந்து ராகுல் சென்றுள்ள போட்டோவும் இணைதளத்தில் வைரலாகி வருகிறது.

latest tamil news

ஞாயிறு என்றாலே அனைவருக்கு ஜாலி அளிக்கும் நாள் ஆகும். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஜாலியாக இன்று காங்., எம்.பி ராகுல் பாத யாத்திரையை மேற்கொண்டார். ராகுல் மேற்கொண்டு வரும் யாத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து உள்ளது. ஆனால் இன்று தான் ராகுல் ஜாலி மூடில் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.