சென்னை: இன்று முதல் வரும் டிசம்பர் 1ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 27 /11/22 முதல் 1/12/22 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் .
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.