சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
திமுக சட்ட விதிகளின்படி அணிகளின் தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர், இணைசெயலாளர்கள், துணை செயலாளர்கள், உறுப்பினர்கள், தணிக்கை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மருத்துவ அணி தலைவராக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, செயலாளராக ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் நாகநாதன், மருத்துவ அணி இணைசெயலாளராக இரா.லட்சுமணன்எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறியாளர் அணி தலைவராக துரை கி.சரவணன், இணை செயலாளராக அ.வெற்றி அழகன் எம்எல்ஏ, துணை செயலாளராக கு.சண்முக சுந்தரம் எம்பி. ஆகியோரும், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா,ஆலோசகர்களாக மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் அணியின் தலைவாக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, செயலாளராக கார்த்திகேய சிவசேனாபதி, அயலக அணி தலைவராக கலாநிதிவீராசாமி எம்.பி., செயலாளராக எம்.பி.க்கள் எம்.எம்.அப்துல்லா, எஸ்.செந்தில்குமார், தணிக்கை குழு உறுப்பினர்களாக ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுடன் கூடுதலாக முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், ஏனாதி ப.பாலசுப்பிரமணியம், ஆர்.டி.சேகர் எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.