துணிவு படத்திற்காக பாடல் பாடிய மஞ்சு வாரியர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. உண்மையை சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராகிறது. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகி உள்ள இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் 'சில்லா சில்லா' என தொடங்கும் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது .

இந்நிலையில் துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த தகவலை புகைப்படங்களுடன் அவரே பகிர்ந்துள்ளார். அதோடு, ‛‛ஜிப்ரான் இசையில் பாடியது திரில்லானது. துணிவு படத்தில் சுவாரஸ்யமான ஒரு பாடல் பாடியது மகிழ்ச்சி. இந்த பாடலை கேட்க ஆவல்'' என தெரிவித்துள்ளார் மஞ்சு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.