நமக்கு வரும் செய்திகள் உண்மையானதா…? 'வதந்தி' தொடரின் இயக்குநர் ஓபன் டாக்!

நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, அமேசான் பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக  சென்றடைந்துள்ளது. 

இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இணையரின் WallwatcherFilms சார்பில்  தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் வரும் டிசம்பர் 2ஆம் தேதி 240 நாடுகளில் ஒளிப்பரப்பாக உள்ளது. 

வதந்தி தொடர், இளமமையும் அழகுமான  வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. இந்த தொடரில் வேலோனி பாத்திரத்தில் நடிகை சஞ்சனா நடித்துள்ளார். அவர் இந்த தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. 

அதை கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். பொய்களின் வலையில் சிக்கியிருக்கும், உண்மையைக் கண்டறிய அவர் போராடும் கதை வெகு சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது. 

இந்த கதையை உருவாக்கியது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டதாவது,”நீண்ட காலமாக வதந்தி தொடரின் கதை என் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல விஷயங்கள், நாம் படிக்கும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் பல்வேறு தளங்களில் நமக்கு கிடைக்கும் தரவுகள் இது எல்லாம் நிறைந்ததுதான் இந்த தொடர்.  

மிக நீண்ட காலமாக, எனக்குள் ஒரு விஷயம் ஓடிகொண்டு இருந்தது, ‘நமக்கு தரப்படும் செய்திகளில் உண்மையிலேயே  முழு உண்மையும் கிடைக்கிறதா, அல்லது  உண்மையை சார்ந்து இருக்கும் பாதி உண்மையை  மட்டுமே நாம் பெறுகிறோமா?. இல்லை, இவை அனைத்திலும், உண்மை மறைக்கப்பட்டு  போகிறதா? என்பதுதான். இந்தக் கேள்விகள் என் மனதில் ஒலித்தன. இதுதான் இந்தக் கதையின் தொடக்கம்.

காலப்போக்கில், நான் நிறைய விஷயங்களைச் சேகரித்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அது ஒரு தொடராக உருவாக்கப்படுவதற்கு என்னிடம் போதுமான விஷயங்கள் இருப்பதை உணர்ந்தேன். அதுதான் இப்போது தொடராக மாறியுள்ளது” என்றார்.

தயாரிப்பாளர்கள்  புஷ்கர்- காயத்ரி கூறியதாவது,”ஒரு தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது. மக்கள் எப்படிப் பயணம் செய்கிறார்கள் அல்லது ஆன்லைனில் படங்களைத் தேடுகிறார்கள் என்பதைப் போன்றது. 

கடந்த 2-3 ஆண்டுகளில், தெற்கில் இருந்து பல கதைகள் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பயணித்து வருகிறது. இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய பகுதிகளில் இருந்து வரும் ‘வதந்தி’ போன்ற கதைகள், அத்தகைய தனித்துவத்தை கொண்டுள்ளன.  அதுதான் எங்களை  ஆக்கப்பூர்வமான பல கதைகளை மீண்டும் மீண்டும் வழங்க தூண்டுகிறது. 

Vadhandhi

அமேசான் ப்ரைம் வீடியோவுடன், எங்களது இந்த கதையை மிகபரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடையவிருக்கிறது. இந்த தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு மேல்  திரையிடப்பட உள்ளது” என்றனர். 

Wallwatcher Films சார்பில் புஷ்கர்-  காயத்ரி ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸால் உருவாக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடரான  வதந்தியில்  பன்முகத் திரைப்படக் கலைஞர் எஸ்.ஜே. சூர்யா, ஓடிடியில் முதல்முறையாக தோன்றவிருக்கிறார். இந்தத் தொடரில் வேலோனி என்ற பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சனா, இந்த தொடரின் மூலம் திரைதுறைக்கு அறிமுகமாகிறார். மேலும் லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.