சுபேந்து சாட்டர்ஜி (50) டெல்லி மஹிபால்பூர் மேம்பாலம் அருகே இன்று சைக்கிளில் சென்றுகொண்டிரு்தார். அப்போது, அவ்வழியாக வந்த BMW கார், சைக்கிளில் பலமாக மோதியுள்ளது.
இதில், சாட்டர்ஜி பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாட்டர்ஜி, குருகிராம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து டெல்லியின் தௌலா குவான் பகுதிக்கு அவர் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Delhi | A VIP number luxury car hit a cyclist near Mahipalpur in Delhi this morning. The cyclist died in the accident. The accused person driving the car has been apprehended and a case has been registered in the matter: Delhi police pic.twitter.com/ejgOEiijCl
— ANI (@ANI) November 27, 2022
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காரின் டயர் திடீரென வெடித்ததில், தனது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரிடம் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஓட்டுநர் குறித்த தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், கார் நம்பர் பிளேட்டை பார்க்கும்போது, விஜபி நம்பர் பிளேட் என தெரியவருகிறது. ‘டெல்லி கண்டோண்மண்ட் வாரியம், நிதிக்குழு தலைவர்’ என காரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, காரை வேகமாக ஓட்டி, உயர் சேதம் விளைவித்ததாக ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். BMW காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.