பேச்சிலர் பார்ட்டிக்காக கிரீஸ் பறந்த ஹன்சிகா! தோழிகளுடன் கும்மாளம் – வீடியோ

பேச்சிலராக இருக்கும் நடிகை ஹன்சிகா விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார். அவர் தன்னுடைய காதலரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்ய உள்ளார். இதனால், தன்னுடைய தோழிகளுக்கு பேச்சிலர் ட்ரீட் வைத்துள்ளார். திருமண உறவில் பங்கேற்றவுடன் குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு முன்பு கொடுக்கும் பேச்சிலர் ட்ரீட்டை தோழிகளை கிரீஸ் அழைத்துச் சென்று கொடுத்துள்ளார் ஹன்சிகா. அங்கு ஆட்டம் பாட்டம் என பேச்சிலர் விருந்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

இந்த வீடியோவை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். வீடியோ முழுவதும் தோழிகளுடன் க்ரீஸ் ரெச்சார்டில் ஜாலியாக இருக்கும் காட்சிகளும் கவர்ச்சி புகைப்படங்களும் நிரம்பியிருக்கின்றன. ஹன்சிகாவுக்கும் சோஹேலுக்கும் இந்தமாதம் தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் டிசம்பர் 4-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி மற்றும் சங்கீத் விழாவும், மறுநாள் காலை ஹல்தி விழாவும் நடைபெறுகிறதாம். டிசம்பர் 2 இரவு சூஃபி இரவு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹன்சிகாவும் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவருடைய காதலர் சோஹேலும் மிகப்பெரிய தொழிலதிபர் என்பதால் நட்சத்திர அந்தஸ்துக்கான அத்தனை ஏற்பாடுகளுடன் திருமணம் நடைபெற இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.