கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம்.
இவர், திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு, அவர் வருங்கால முதல்வர் ஆக வேண்டியும்,
நடித்த கலகத் தலைவன் திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் பென்சில், பிரஷ் பயன்படுத்தாமல் திமுக கொடியைக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், அவர் நடித்த கலகத் தலைவன் திரைப்படம் வெற்றி பெற வேண்டியும், மீண்டும் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் வாழ்த்து கூறும் விதமாக அவர் இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு அனைவரின் கவனத்தை கவர்ந்தார்.
உதயநிதி ஸ்டாலின் வருங்காலத்தில் தமிழக முதல்வராக வர வேண்டி ‘வருங்கால முதல்வர்… இளைய கலைஞர்… உதயநிதி ஸ்டாலின்’ என்ற வாசகத்தை எழுதி பென்சில், பிரஷ் பயன்படுத்தாமல், “திமுக கொடி”யை மட்டும் கொண்டு நீர்வண்ணத்தில் திமுக கொடியை தொட்டு நனைத்து, உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உருவத்தை பத்து நிமிடங்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்து அசத்தினார்.
இந்த ஓவியத்தை கண்ட பொதுமக்கள் எப்படி இவர் இப்படியெல்லாம் யோசித்து வரைகிறார், புதுமையான, வித்தியாசமான சிந்தனை என்று ஓவிய ஆசிரியர் செல்வத்தை வெகுவாக பாராட்டினர்.