இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலவே ஷார்ட் வீடியோவை உருவாக்க உதவும் செயலி ஒன்றை ஜியோ பிளாட்பார்ம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக இரண்டு நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. இந்த புதிய செயலியில் பயனர்கள் தங்கள் கன்டென்ட் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த புதிய ஷார்ட் வீடியோ செயலி குறித்த தகவல்கள் இன்னும் ரிலையன்ஸ் தரப்பில் முழுவதுமாக வெளியிடப்படவில்லை. ஆனால் அடிப்படையில் இது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலவே இயங்கும் என தெரிகிறது.
கடந்த 2020 வாக்கில் இந்திய நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சொல்லி பல நூற்று கணக்கிலான சீன தேச செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு. அதில் டிக்டாக் செயலியும் ஒன்று. அதற்கு மாற்றாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜியோ இப்போது புதிய ஷார்ட் வீடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு இதன் பீட்டா வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும். அழைப்பின் பேரில் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்த முடியும். வரும் 2023 வாக்கில் அனைவரும் பயன்படுத்தும் வகையிலான வெர்ஷன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பாரத்தின் கீழ் ஜியோ டெலிகாம், ஜியோ ஸ்டூடியோஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்றவை இயங்கி வருகின்றன. அதில் புதிய வரவாக இந்த ஷார்ட் வீடியோ செயலி இணைந்துள்ளது.