உதயநிதிக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் வாழ்த்து

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கனிமொழி எம்.பி. அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகம் சென்ற உதயநிதிக்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பசரன், கீதா ஜீவன், பெரிய கருப்பன், ராமச்சந்திரன், சக்கரபாணி, செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ், சா.மு.நாசர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், கிரிராஜன்
எம்.பி., முன்னாள் எம்.பி. செல்வகணபதி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்எல்ஏக்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், க.சுந்தர், மயிலை வேலு, ஜெ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, சென்னை வடகிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.சீனிவாசன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, அன்பகத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் உதயநிதியை சந்தித்து வாழ்த்தினர். மேலும், திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைத் தலைவர் எ.வ.குமரன், மருத்துவ இயக்குநர் எ.வ.வே.கம்பன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமின்றி, பல்வேறு தலைவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கனிமொழி எம்.பி. திமுக தலைவர், தமிழக முதல்வரின் மகனும், திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணியும், கலைப் பணியும் சிறந்திட வாழ்த்துகிறேன் திராவிடர் கழகத் தலைவர்

கி.வீரமணி: இளம் வீரர், வீராங்கனைகளைப் பக்குவப்படுத்தி, திராவிடக் கொள்கை நாற்றுகளை உருவாக்கும் பணியில் திட்டமிட்டு செயல்பட்டு உழைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு உளம்பூரித்த வாழ்த்துகள். அணி வகுத்துப் பணி முடித்து, வரலாறு படையுங்கள்.

விசிக தலைவர் திருமாவளவன்: பிறந்தநாள் காணும் அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலினுக்கு இனிய வாழ்த்துகள்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத் தலைவரும், எங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.