கனடாவில் எரிந்த காரில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காருக்குள் சடலம்
ஒன்றாறியோவின் உள்ள பர்லிங்டன் நகரில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த காரில் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 3.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலதிக தகவல்கள்
தீயை அணைத்த பிறகு ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
உடலானது ஆய்வு செய்யப்படுவதற்காக தடய அறிவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
விசாரணை முடிவில் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.