
மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்
ஒரு காலத்தில் பிசியான இசை அமைப்பாளராக இருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். மின்னலே படத்தில் தொடங்கி அதன் பிறகு 12பி, சாமுராய், லேசா லேசா, சாமி, காக்க காக்க, செல்லமே, கஜினி, வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, தாம் தூம், அயன், துப்பாக்கி, நண்பன், என்றென்றும் புன்னகை, என பல படங்கிளல் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். 2015ம் ஆண்டு முதலே அவரின் படங்கள் குறைய தொடங்கியது. கடைசியாக அவர் தி லெஜண்ட் படத்திற்கு இசை அமைத்தார். அவர் இசை அமைத்துள்ள துருவ நட்சத்திரம் படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் மலேசியாவில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் 'யுவன்25' இசை நிகழ்ச்சியை நடத்திய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் நடத்துகிறது. வருகிற ஜனவரி 21ம் தேதி ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ் என்ற பெயரில் நடக்கிறது. இதில் பல பின்னணி பாடகர்களும் பங்கேற்க உள்ளனர்.