திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி பேருந்தை ஓட்டியவர் படவேடு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி சேர்ந்த நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
மறுநாள் வந்து அந்த பேருந்தை எடுக்க அவர் முயற்சித்த போது பேருந்து மைதானத்தில் இல்லை. இதனால், ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்து உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ஓட்டுநர் இருவரும் சேர்ந்து போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கல்லூரி பேருந்து திருடிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி தலைமையிலான 15 பேர் கொண்ட தனிப்படை சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .ஒரு மிகப்பெரிய கல்லூரி பேருந்து தடம் தெரியாமல் காணாமல் போய்விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.