சட்டீஸ்கரில் கொடூரம்; தந்தை, மாமனால் 2 சகோதரிகள் பலாத்காரம்: கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓட்டம்

துர்க்: சட்டீஸ்கரில் தந்தை மற்றும் மாமனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இரு சகோதரிகள், தற்போது ராய்ப்பூரில் மீட்கப்பட்டனர். அவர்களது தந்தை மற்றும் மாமனை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் நகரை சேர்ந்த 16, 20 வயது மதிக்கத்தக்க இரு சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சகோதரிகளின் தந்தை மற்றும் மாமனை போலீசார் கைது ெசய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் எஸ்பி பிரபாத் குமார் கூறுகையில், ‘இரண்டு சகோதரிகளின் தாய் நோய்வாய்ப்பட்டிருந்ததால், சிறுமிகளால் தங்களது தாயை முழுமையாக கவனிக்க முடியவில்லை.

அதனால் இருவரும் அடிக்கடி தங்களுடைய அத்தை வீட்டிற்கு சென்று வந்தனர். அப்போது அவர்களின் மாமன், இரு சகோதரிகளிடமும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். பின்னர் மூத்த சகோதரியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இளைய சகோதரியையும் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியும் உள்ளார். இதுபற்றி தனது தந்தையிடம் சகோதரிகள் தெரிவித்தபோது, ​​அவர் இருவரையும் மிரட்டி உள்ளார். பின்னர் அவரும் மூத்த சகோதரியான தனது மகளிடமே தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நாளடைவில் இரு மகள்களையும் தந்தையே பலாத்காரம் செய்யத் தொடங்கினார். தந்தை மற்றும் மாமனின் கொடூர செயல்களால் மனமுடைந்த இரு சகோதரிகளும், வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அவர்கள் ராய்ப்பூரில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்தனர். இதற்கிடையே தனது இரு மகள்களும் திடீரென மாயமானதாக அவர்களின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து வழக்குபதிவு செய்து இரு சகோதரிகளையும் தேடிவந்தோம்.

இந்த நிலையில் அவர்கள் சகோதரிகள் இருவரும் ராய்பூரில் ஆபரேஷன் முஸ்கான் பகுதியில் மீட்கப்பட்டனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தை மற்றும் மாமன் மீது ஐபிசி 376, 354 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளோம்’ என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.