புதுடில்லி: ‛தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து கோவா திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் கடுமையான விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்த அப்படத்தின் இயக்குனர் அக்னிஹோத்ரி, ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்’ என தெரிவித்துள்ளார்.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நேற்றுடன் (நவ.,28) நிறைவடைந்தது. இந்த விழாவில் மொத்தம் 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்திய பனோரமாவில் 25 படங்கள் ஒளிபரப்பப்பட்டன.
இந்த விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதும் கிடைக்கவில்லை.
எனினும் நிறைவு நாளில் தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்பல மாநிலங்களில் வரவேற்பை பெற்ற ‛தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை இழிவான படம் என விமர்சித்த தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மன் கூறுகையில், ‛நாடவ் லேபிட்டின் தனிப்பட்ட கருத்து துரதிருஷ்டவசமானது. உண்மையில் அவர் என்ன பேசுகிறார் என்று தெரியாமல், எந்த உணர்வும் இல்லாமல், வரலாற்று உண்மைகள் குறித்த தனது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்ததற்காக கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

தி காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் அக்னிஹோத்ரி, ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement