தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக யோகிபாபு இருந்து வருகிறார், குறிப்பிட்ட காலத்திற்குள் தனது எதார்த்தமான நடிப்பு திறமையால் பல ரசிகர்களையும் சம்பாதித்து இருக்கிறார். இப்போது திரைக்கு வரும் ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் என்றால் அதில் யோகிபாபு தான் இருக்கிறார், கதாநாயகர்களுக்கு சமமாக நகைச்சுவை நடிகரான ஐவரும் பிசியாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த ‘லவ் டுடே’ படத்தில் யோகிபாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், படத்தின் க்ளைமேக்சில் பாடி ஷேமிங் குறித்து இவர் பேசிய விதம் ரசிகர்களைதான் கைதட்டலை அள்ளியது. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தது மட்டுமின்றி மண்டேலா மற்றும் கூர்க்கா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
யோகிபாபு கதாநாயகனாக நடித்திருந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர் ஒரு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் படக்குழு இவர்தான் தங்கள் படத்தின் ஹீரோ என்பது போல போஸ்டர்களை வெளியிட்டது. தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது, கின்னஸ் கிஷோர் எழுதி இயக்கியுள்ள ‘தாதா’ படம் டிசம்பர் மாதம் 9ம் தேதியன்று வெளியாகவுள்ளது, இந்த படத்தில் நிதின் சத்யா, யோகிபாபு, மனோபாலா மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
Iam not hero intha padathla Nithin Sathya hero aver frinda Nan paniiriukan Nan hero illa makkla nambathinga pic.twitter.com/763PslR9Mu
— Yogi Babu (@iYogiBabu) November 28, 2022
இந்த படத்தில் நிதின் சத்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார், ஆனால் படக்குழுவினர் தாதா படத்தில் யோகிபாபு தான் கதாநாயகனாக நடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் யோகிபாபு தாதா படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த தகவலை தெளிவுபடுத்தி இருக்கிறார். இதுகுறித்த அவரது ட்வீட்டில் ‘தாதா’ படத்தின் போஸ்டரை பகிர்ந்து அதனுடன், “நான் இந்த படத்தின் கதாநாயகன் இல்லை, நிதின் சத்யா தான் இப்படத்தின் கதாநாயகன், நான் அவரது நண்பராக மட்டும் தான் நடிக்கிறேன், நான் கதாநாயகன் இல்லை மக்களே நம்பாதீங்க” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.