பொதுவாகவே விலங்குகள் மற்றொரு விலங்குடன் பாசமாக இருக்கும். எதை பற்றியும் சிந்திக்காமல் ஒன்றாக பழகும். நாய் மற்றும் பூனை இவ்வாறு இருப்பதை நாம் பார்த்து இருப்போம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் குரங்கு ஒன்று ஆதரவற்ற நாய்குட்டியை எடுத்து வளர்த்து வருகிறது. இக்குரங்கிற்கு பிறந்த குட்டிகள் இறந்துவிட்டதாகவும், இதனால் சாலையில் ஆதரவற்று சுற்றி திருந்த நாய் குட்டி ஒன்றை அக்குரங்கு தனது குட்டியாகவே பாவித்து எடுத்து வளர்க்க தொடங்கியுள்ளது.
அதற்கு பாலூட்டி குரங்கை போன்று வயிற்றில் வைத்துக்கொண்டே யாரும் அதை நெருங்காதவாறு பாதுகாத்து வருகிறது. அதேபோல் அந்த நாய் குட்டியும் குரங்கிடமே பால் குடித்து மிகுந்த பாசத்தோடு வளர்ந்து வருகிறது. இக்குரங்கு அங்குள்ள பொது மக்களிடம் பாசமாக பழகியும் வருகிறது. அவர்கள் இக்குரங்கிற்கு தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இனம் வேறு என்றாலும் தாய்மை ஒன்று என்பதை உணர்த்தும் இக்குரங்கின் செயலையும், குரங்கு மற்றும் நாய் குட்டியின் அளவில்லா பாச பிணைப்பையும் பார்ப்போரை நெகிழ்ச்சி செய்து வருகிறது.