கன்னியாகுமரி மாவட்டத்தில் யாசகம் கேட்பது ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற ஒரு வட மாநில பெண் அடையாளபடுத்தும் விதமாக மார்க் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், சந்தேகம் அடைந்த மக்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கன்னியாகுமரி அருகே நித்திரவிளை பகுதியில் அமைந்துள்ள நம்பாளி சுற்றுவட்டார பகுதியில் ஒரு வட மாநில பெண் வீடு வீடாக சென்று யாசகம் கேட்டு கொண்டு இருந்தார்.
பின், சில வாசல்களில் ரகசியமாக குறீயீடு போட்டுவிட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக சந்தேகமடைந்த மக்கள் அந்த பெண்ணை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அவர் போட்ட குறியீடு ஏதாவது விபரீதத்தை குறிக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது. அப்பெண்ணை கைது செய்த போலீசார் அவரது கைரேகை பதிவுகளை பெற்று கொண்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.