ஆன்லைன் ரம்மி தடை செய்தல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் அவசர சட்டத்தின் காலக்கெடு முடிவடைந்தது. இந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்ட சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் பிறகு தமிழக ஆளுநர் இந்த சட்டத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்திற்கும் தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து பதில் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
தமிழக ஆளுநரின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கு நேரம் ஒதுக்குமாறு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேட்டிருந்தார். ஆனால் அமைச்சர் ரகுபதிக்கு ஆளுநர் மாளிகை நேரம் ஒதுக்கவில்லை.
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாளை காலை 11 மணிக்கு ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.