கற்பழிப்பு ரஷ்ய வீரர்களின் ஆயுதம்; உக்ரைன் அதிபரின் மனைவி சாடல்.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 9 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இலங்கை நாடு திவாலாகிவிட்டது. உலக நாடுகள் பொருளாதார சரிவிலிருந்து மீள, உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை உலக நாடுகளின் தலைவர்கள் எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ரஷ்ய வீரர்களின் மனைவிகள், உக்ரைன் பெண்களை கற்பழிப்பதை ஊக்கப்படுத்துவதாக, உக்ரைன் அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார். இது குறித்து லண்டனில் நடைபெற்ற போரில் நடைபெறும் பாலியல் வல்லுறவு குறித்த சர்வதேச மாநாட்டில் உக்ரைன் அதிபர் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா கூறும்போது, ‘‘ ரஷ்ய வீரர்கள் உக்ரைன் பெண்களை வன்புணர்வு செய்வதையும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை செய்வதையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

ரஷ்ய வீரர்களின் மனைவிகள், உக்ரைன் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய ஊக்கப்படுத்துகின்றனர். தன்னுடைய மேலாதிக்கத்தை காட்ட பாலியல் வல்லுறவு செய்வது என்பது மிகுந்த அருவறுக்கத்தக்க, விலங்குத்தனமான செயலாகும். போர் சூழலில் இப்படி பாதிக்கப்படுபவர்கள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகின்றனர். போர் சூழலில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

தங்களது ஆயுத தளவாடத்தின் மற்றொரு ஆயுதமாக ரஷ்ய வீரர்கள் இத்தகைய இழி செயலை நினைக்கின்றனர். ஆதனால் தான் இத்தகைய செயலை ஒரு அமைப்பாகவும், வெளிப்படையாகவும் அவர்கள் செய்துவருகின்றனர். ரஷ்யர்கள் இதை வெளிப்படையாக செய்துவருவது, அவர்களது உறவினர்களுடையே போன் அழைப்புகள் மூலம் தெரியவருகிறது. அவரது மனைவிகளும் வீரர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.

ராணுவ வீரர்களின் தாயார்களை சிறப்பிக்க ரஷ்ய அதிபர் முடிவு.!

இதற்காக ரஷ்யர்கள் சர்வதேச சமூகத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இதை ஒரு போர் குற்றமாக அறிவிக்க வேண்டியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.