
சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் இன்று காலமானார். அவருக்கு வயது 96.
1989 முதல் 2004-ம் ஆண்டு வரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை சீன அதிபராகவும் பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின்.

1989-ம் ஆண்டு தியெனமென் ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஜெமின், உலக அரங்கில் வலிமையான நாடாக்கும் இலக்கு நோக்கி சீனாவை வழி நடத்தினார்.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில், உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 12.13 மணியளவில் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.