தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுவதை கருத்தில் கொண்டு, தமிழக அமைச்சரவை அவரச தடை சட்டத்தை கொண்டுவந்தது.
மேலும், தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டதிற்கு தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர தடைச்ச சட்டமும் காலாவதியாகி விட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் 34 பேர் தங்களின் உயிரை பாலி கொடுத்துள்ளனர்.
சென்னை மணலி கால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 26). ஆட்டோ ஓட்டுநரான இவர் அவ்வப்போது, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் ஆடி வந்துள்ளார்.
சம்பவம் நடந்த இன்று பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதல்கட்ட விசாரணையின்படி, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதா தெரியவந்துள்ளது.
[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள் :
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் – 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் – 044-24640050
உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]