நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் நடிகர் அஜித்குமாரை வைத்து ‘துணிவு’ படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மமதி சாரி, அமீர், பாவ்னி, சிபி சந்திரன், மகாநதி ஷங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் அதாவது நவம்பர் 29ம் தேதியன்று முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
‘துணிவு’ படம் குறித்து சில நெருங்கிய திரை வட்டாரங்கள் கூறுகையில், படக்குழுவினர் அஜித்குமாரின் 61வது படமான துணிவு படத்தின் பாடல் சென்னையில் படம்பிடிக்கப்பட்டது. இந்த ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமானது வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது, இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு சிறப்பான தோற்றத்தில் காணப்படுவார், அவரது திரைவாழ்க்கையில் இந்த படம் கண்டிப்பாக ஒரு சிறந்த படமாக அமையும் என்று தெரிவித்துள்ளனர். ‘துணிவு’ படத்தை ஜனவரி 11ம் தேதியன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது, தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஜித்தின் ‘துணிவு’ படம் ரசிகர்களுக்கு சிறந்த பொங்கல் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் பணியை செய்ய, படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.