மாளிகைமேட்டில் கிடைத்த பொக்கிஷங்களை பாதுகாக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின்

அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் கிடைத்த பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற பல்வேறு பணிகள் தொடக்க விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் அரியலூரில் ரூ.60 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள … Read more

கால்பந்து ஜாம்பவான் பீலே-வின் உடல்நிலையில் சரிவு: மருத்துவமனையில் அனுமதி!

உலக கால்பந்து போட்டிகளின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பீலே-வீன் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்பந்து பந்து ஜாம்பாவான் உலக கால்பந்து ரசிகர்களால் மிகப் பெரிய ஜாம்பவான் என போற்றப்படும் பீலே தனது பிரேசில் நாட்டு கால்பந்து அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளார். வரலாற்றில் 1958, 1962 மற்றும் 1970 ஆகிய மூன்று உலக கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பிரேசில் கால்பந்து வீரர் பீலே … Read more

புதுச்சேரியின் செல்லப்பிள்ளை மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீர் உயிரிழப்பு: பக்தர்கள் கண்ணீர்

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி,  நடை பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலுக்கு 1997ம் ஆண்டு 5 வயதில் லட்சுமி யானை கொண்டுவரப்பட்டது. பக்தர்களுக்கு செல்லப்பிள்ளையாகவும், மிகவும் நெருக்கமான  யானையாக லட்சுமி திகழ்ந்தது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் நடக்கவில்லை. இந்தாண்டு கோயில் நிர்வாகம், வனத்துறை அறிவுறுத்தல்படி லட்சுமிக்கு அது தங்கியுள்ள வேதபுரீஸ்வரர் கோயில் வளாக … Read more

அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டம் தீவிரவாதிகளுக்கு தொடர்பு?: என்ஐஏ விசாரணை

திருவனந்தபுரம்: விழிஞ்ஞம்  அதானி துறைமுகத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு  (என்ஐஏ) விசாரணையை தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம் அருகே  விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் கட்டும் பணிகளை எதிர்த்து, விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் நடந்த  போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் விழிஞ்ஞம் போலீஸ் நிலையம்  சூறையாடப்பட்டது.   36 போலீசார் கடுமையாக  தாக்கப்பட்டனர். … Read more

புதுடில்லி மதுபான மோசடி மற்றொரு தொழிலதிபர் கைது| Dinamalar

புதுடில்லி, புதுடில்லியில் மதுபான விற்பனை மோசடி தொடர்பான வழக்கில் மற்றொரு தொழிலதிபரை, அமலாக்கத் துறை நேற்று முன்தினம் கைது செய்துள்ளது. புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபான கொள்கை மாற்றப்பட்டது. இதில், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. கலால் துறையை கவனிக்கும் துணை முதல்வர் மணீஷ் … Read more

வாரிசு டிரைலர் எப்போது?

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் வாரிசு. தமன் இசை அமைத்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்காக விஜய் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த பாடல் தெலுங்கிலும் இன்று(நவ., 30) வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது. டிச., 25ல் படத்தின் இசை … Read more

பாலியல் வன்கொடுமையில் ரஷ்ய படையினர் உக்ரைன் அதிபரின் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு| Dinamalar

லண்டன், ”உக்ரைன் நாட்டு பெண்களை பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்வதை ரஷ்ய படையினர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்,” என உக்ரைன் அதிபரின் மனைவி ஒலேனா செலன்ஸ்கா, 44, குற்றஞ்சாட்டி உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், கடந்த பிப்., துவங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. இதில், ரஷ்யா பல்வேறு விதமான போர் உத்திகளை கையில் எடுத்தாலும், உக்ரைனை கைப்பற்றுவதில் அது பின்னடைவையே சந்தித்து வருகிறது. இந்நிலையில், போர்களின் போது ஏற்படும் … Read more

புதுச்சேரி | மணக்குள விநாயகர் கோயில் யானை ‘லட்சுமி’ நடைபயிற்சியில் மயங்கி விழுந்து திடீர் மரணம்: மீளா துயரில் பக்தர்கள்

புதுச்சேரி: ஓய்வில் இருந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து இன்று காலை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். பட்டியலின மாணவரான அவரும், அவரோடு படித்து வந்த நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அந்த இளம் பெண்ணுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் … Read more