
காசேதான் கடவுளடா டிசம்பர் 23ம் தேதி ரிலீஸ்
முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 1972ம் ஆண்டில் வெளியான படம் காசேதான் கடவுளடா. ஏவிஎம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த படத்தை ஆர்.கண்ணன் ரீமேக் செய்திருக்கிறார். இதில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதமே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் செய்தியை மாற்றி வைத்தார்கள். தற்போது வரும் டிசம்பர் 23ம் தேதி படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.