வலையில் சிக்கிய அரியவகை டால்பின்கள்., மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு!


தமிழக மீனவர்களின் வலையில் சிக்கிய இரண்டு டால்பின்கள் மீண்டும் பத்திரமாக கடலில் விடப்பட்டன.

டால்பின்களை பத்திரமாக மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டால்பின்கள்

ராமநாதபுரம் கீழக்கரையில் செவ்வாய்கிழமை அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன்கள் வலையில் சிக்கின.

வலையில் சிக்கிய அரியவகை டால்பின்கள்., மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு! | Tamil Nadu Fishermen Rescue Dolphins Fishing NetTwitter screengrab @supriyasahuias

வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பின்களை, மீனவர்கள் உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

டால்பின்களை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களை உண்மையான ஹீரோக்கள் என அழைத்த சுப்ரியா சாஹு, அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

அதன்படி, அழிவின் விளிம்பில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை பத்திரமாக மீட்டு கடலில் விடும் மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நவம்பர் 20-ஆம் திகதி சாயல்குடி அருகே நரிப்பையூர் மீனவர்கள் கரை வலையில் சிக்கிய 200 கிலோ எடையுள்ள டால்பினை கடலுக்குள் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.