அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் 'கட்சிக்காரன்'

'தோனி கபடி குழு' படத்தை இயக்கிய ப.ஐயப்பன் தனது இரண்டாவது படமாக 'கட்சிக்காரன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். பி.எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் விஜித் சரவணன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவர் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் நடித்தவர். ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடிக்கிறார்.

சிவசேனாதிபதி, தெனாலி, அப்புக்குட்டி. மருதுபாண்டியன், ஜவகர், விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன், வின்சென்ட் ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மதன்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், கார்த்திகேயன் இசை அமைத்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஐயப்பன் கூறியதாவது: ஒரு கட்சித் தொண்டன் என்பவன் விசுவாசிதானே தவிர அடிமை அல்ல. அன்புக்காக வந்து நிற்பான். உரிமைக்காகக் குரல் கொடுப்பவன் என்கிற ரீதியில் இந்தப் படம் உருவாகி உள்ளது. தொண்டர்களைக் கட்சித் தலைவர்கள் எப்படி நடத்துகிறார்கள்? அவர்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பதைப் பற்றிக் கூறுகிறது இந்தப் படம்.

நாட்டுக்குள்ள எந்த கட்சியுமே சரியில்ல. எல்லா கட்சியுமே கோடி கோடியா பணத்தை அடிக்கிறதுலதான் குறிக்கோளா இருக்காங்க. எந்தத் தலைவன் சொந்த காசு செலவு பண்றான்? மனுத் தாக்கல் செய்யும்போது ஆயிரம் கோடி சொத்து இருக்கும். ஆனா ஒரே ஒரு கார் இருக்கும் என்பான். எல்லாத்தையும் பொண்டாட்டி பேர்ல வச்சுட்டு, பொய் சொல்லுவான். அவனுக்கும் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு தான் இருக்காங்க.

அவங்க கொடுக்கும் குடத்துக்கும், குவார்ட்டருக்கும் நம்பி நல்லவங்கன்னு நினைச்சு ஓட்டு போடறோம். அவங்க நம்ம கிட்ட பல கோடி ஆட்டைய போட்டு பணக்காரனாயிடுறாங்க. இப்ப இருக்கிற நிலைமையில ஓட்டுக்குப் பணம் கொடுக்கலைன்னா எம்ஜிஆரே இருந்தாலும் ஜெயிக்க முடியாது. இதைத்தான் இந்த படம் பேசப்போகிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.