உலக கோப்பையில் ஜப்பான் வெற்றி முன்பே தீர்மானிக்கப்பட்டது: ஜேர்மனிக்கு எதிரான சதி என ரசிகர்கள் கொந்தளிப்பு


2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றுள்ளது.

முன்னிலை பெற்ற ஸ்பெயின்

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.

சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் அணிக்கு இந்த போட்டியின் வெற்றி மிக முக்கியமாக கருதப்பட்ட நிலையில், ஸ்பெயின் ஜப்பான் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக தொடங்கியது.

உலக கோப்பையில் ஜப்பான் வெற்றி முன்பே தீர்மானிக்கப்பட்டது: ஜேர்மனிக்கு எதிரான சதி என ரசிகர்கள் கொந்தளிப்பு | Fifa World Cup 2022 Japan Victory Is Fixed Germany

முதல் பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜப்பான் வீரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஸ்பெயின் அணி வீரர் மொராட்டா ஆட்டத்தின் 11 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

ஸ்பெயின் அணியின் முன்னிலையை சமன் செய்ய போராடிய ஜப்பான் அணியால் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது,  இதனால் முதல் பாதி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முதன்மை பெற்றது.

வெற்றி நிலைநாட்டிய ஜப்பான்

1 கோல் பின்தங்கிய நிலையில் இரண்டாம் பாதியில் களமிறங்கிய ஜப்பான் அணி, அடுத்தடுத்து கோல்களை அடித்து மிரட்டியது.
இரண்டாம் பாதி தொடங்கி மூன்று நிமிடங்கள் ஆகி இருந்த நிலையில், ஜப்பான் வீரர் டோன் ஆட்டத்தின் 48 நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

வெற்றி நிச்சயமாக வேண்டும் என்ற உறுதியுடன் விளையாடிய ஜப்பான் அணி, மீண்டும் அடுத்த மூன்று நிமிட இடைவெளியில் மற்றொரு கோலை அடித்து அசத்தினார்கள்.

உலக கோப்பையில் ஜப்பான் வெற்றி முன்பே தீர்மானிக்கப்பட்டது: ஜேர்மனிக்கு எதிரான சதி என ரசிகர்கள் கொந்தளிப்பு | Fifa World Cup 2022 Japan Victory Is Fixed GermanyGetty Images

இந்த கோலை ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் வீரர் தனகா அடித்தார். இதன் மூலம் ஜப்பான் அணி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை ஸ்பெயின் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், 1-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.

சூப்பர் 16 சுற்று

இந்த போட்டியில் ஜப்பான் அணி வெற்றி பெற்றதை அடுத்து மொத்தம் 6 புள்ளிகளுடன் குரூப் E பிரிவில் ஜப்பான் முதல் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலக கோப்பையில் ஜப்பான் வெற்றி முன்பே தீர்மானிக்கப்பட்டது: ஜேர்மனிக்கு எதிரான சதி என ரசிகர்கள் கொந்தளிப்பு | Fifa World Cup 2022 Japan Victory Is Fixed Germanyfifa.com

ஜப்பானை தொடர்ந்து ஸ்பெயின் மற்றும் ஜேர்மன் அணிகள் 4 புள்ளிகளுடன் சமனில் இருந்த நிலையில் விளையாட்டு புள்ளிகளின் அடிப்படையில் ஸ்பெயின் அணி இரண்டாம் இடத்தை பிடித்து சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஜேர்மன் ரசிகர்கள் கொந்தளிப்பு

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 51வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் தனகா அடித்த கோல் ஜப்பான் அணியை போட்டியின் முன்னிலைக்கு அழைத்து சென்று வெற்றி பெற செய்தது. இதனால் லீக் ஆட்டங்களிலேயே ஜேர்மன் அணி வெளியேற நேர்ந்தது.

ஆனால் இந்த கோல் தொடர்பான மறுபதிவுகள் வெளியான போது ஆட்டத்தின் 51 வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் தனகா கோல் அடிப்பதற்கு முன்பே பந்து கோட்டிற்கு வெளியே போவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டது. ஆனால் பந்து இன்னும் கோட்டிற்குள் இருப்பதாக வர்ணனையாளர்கள் உறுதி செய்தனர்.

உலக கோப்பையில் ஜப்பான் வெற்றி முன்பே தீர்மானிக்கப்பட்டது: ஜேர்மனிக்கு எதிரான சதி என ரசிகர்கள் கொந்தளிப்பு | Fifa World Cup 2022 Japan Victory Is Fixed GermanyTwitter/@GNev2

இதனால் ஆத்திரமடைந்த ஜேர்மன் ரசிகர்கள் போட்டியின் முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது, ஜேர்மன் அணியை வெளியேற்ற முன்பே உறுதி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஜேர்மன் ஆதரவாளர் ஒருவர் இது “நிச்சயம்” (FIXED) செய்யப்பட்ட போட்டி என்று ட்வீட் செய்துள்ளார். 

மற்றொரு நபர், “ஸ்பெயின் மற்றும் ஜப்பான் இடையேயான ஆட்டம் உலகக் கோப்பை நாக் அவுட் நிலைகளில் இருந்து ஜெர்மனியை வெளியேற்றுவதற்காக முன்பே உறுதி செய்யப்பட்டது” என கருத்து தெரிவித்துள்ளார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.