கோயில் அர்ச்சகர்களிடம் ஆபாசமாக பேசியதாகப் புகார்… அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் மீது வழக்குபதிவு!

சேலம், சொர்ணாம்பிகை தெருவை சேர்ந்தவர் தங்கபிரசன்னகுமார். இவர் சேலம் கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி பணியில் இருந்தபோது, திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு வந்து அம்மன் சந்நிதியில் பூஜையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் தங்கபிரசன்னகுமாரிடம் தகராறில் ஈடுப்பட்டிருக்கிறார். மேலும் அங்கு பணியாற்றக்கூடிய அர்ச்சகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த நிலையில், கோயில் அர்ச்சகர்கள் அனைவரும் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் மீது சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர், அதன்படி அவர்களின் புகாரை ஏற்று போலீஸார் மனு ரசீது வழங்கியிருந்தனர்.

கே.என்.நேரு

இந்த நிலையில், சமீபத்தில் சேலம் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு சேலம் வந்திருந்தபோது பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் அவரைப்பார்த்து இந்த சம்பவம் தொடர்பாக பேசியதாக தெரிகிறது. அவர்கள் “அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் அவருக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருக்கும், துப்பாக்கிக்கொண்ட காவலர்கள் மூலம் மிரட்டுகிறார். தங்களை பணிசெய்ய செய்யவிடமாட்டுகிறார்” என்று முறையிட்டனர்.

அதன்மூலம் சம்பந்தப்பட்ட புகார் குறித்து மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடாவை உடனடியாக விசாரிக்க அறிவுறுத்தியிருந்தார். அதன்மூலம் நேற்று சம்பந்தப்பட்ட கோயில் விவகாரம் தொடர்பாக டவுன் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோகிலா விசாரணை செய்து கிடைத்த ஆதரங்களின் மூலம் அல்லிக்குட்டை ராதாகிருக்ஷ்ணன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டியது என்று இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்.

அல்லிக்குட்டை ராதாகிருக்ஷ்ணன்

இதுகுறித்து அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, “நான் யாரையும் ஒருமையில் பேச வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு பக்தனாக கோயிலில் நடைப்பெற்று வரும் தவறுகளை தட்டிக்கேட்டேன். மேலும் நான் எனக்கு பாதுக்காப்புக்கு வழங்கப்பட்ட காவலர்களை தவறாக பயன்படுத்தியது இல்லை. அதுவும் அவர்களை வைத்து மிட்டுகிறேன் என்று கூறுவதெல்லாம் பொய். தப்பு செய்தவர்கள் அமைச்சர், முதலமைச்சர் என்று எங்கு போனாலும் அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.